Tuesday, February 13, 2018


MAA



Director Sarjun என்றால் எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியவில்லை. ஆனால் Lakshmi என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது என நினைகின்றேன். ஆம் Lakshmi short film இனுடைய‌ Director தான் Sarjun.
Lakshmi....
பல நெட்டிசன்களின் கருத்துகளுக்குற்ப்பட்ட short film என அனைவரும் அறிந்ததே.
MAA....
27.01.2018 அன்று வெளியான‌ அவருடைய அடுத்த short film. இதில் அவர் பேச வந்த விடயம் தாய்மையும் அவள் உணர்வுகளும், & கலாச்சார சீர்கேடு...
இந்தப் பட‌த்தில் 2,3 dialogues ரொம்பவே ஆழ்மனதை பாதிக்கக் கூடியதாக இருக்கிறது. அதில் ஒன்று "பயத்தோடும் வெறுப்போடும் ஒரு உயிரை இந்த உலகத்துக்கு கொண்டு வரக்கூடாது." இன்னொன்று "ஒரு தப்ப செய்றதுக்கு முன்னாடி 10 தடவை யோசிக்கனும் அதே ஒரு பெண்ணாக இருந்தால் 100 தடவை யோசிக்கணும் காரணம் அந்தத் தவறால் வரும் விளைவுக்கு அந்தப் பெண்ணும் அந்தப் பெண்ணின் தாயும் மட்டுமே பழிச்சொல்லுக்கு ஆளாவார்கள்."
பொதுவாக இந்த உலகத்தில் ஆண்கள் தவறு செய்தால் அது தவறே கிடையாது ஆனால் பெண்கள் தவறு செய்தால் அது மிகப் பெரிய தவறு. தவறு என்பதற்கு அளவே கிடையாது. ஆணோ பெண்ணோ யார் செய்தாலும் சிறிதோ பெரிதோ தவறு தவறுதான்.
இன்றைய கால கட்டத்தில் ஆணும் பெண்ணும் நண்பர்களாக‌ பழகுவது தவறில்லை. ஆனால் அதே ஆண் நண்பனின் துணை தனியே கிடைக்கையில் இதுதான் காதல் என காமம் என்ற உணர்ச்சிக்கு அடிமைப்பட்டு விடுகிறார்கள். இதை இந்தப் படம் மிக அழகாக எடுத்துக் காட்டுகிறது. இதில் அக்குழந்தைக்கும் அம்மாவுக்குமான உறவு மிகவும் அழகாக இருக்கிறது. அக்குழந்தை சொல்கிறாள் அம்மா நான் செய்தது தப்புத்தான் என்னை மன்னிச்சுடுங்க எனக் கூற அதை உணரும் பருவத்தில் தாயும் இருக்கிறாள் என்பது தான் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டிய விடயம். இது இன்று பல பெற்றோர்களிடம் இல்லை. தன் குழந்தை தவறு செய்து விட்டால் அத்தவறின் ஆழம் என்ன அது ஏன் தவறு செய்தது அந்தத்தவறை மூடி மறைக்காமல் அந்தத்தவறு பின்நாட்களில் அவர்களின் வாழ்க்கையில் வராமலிருக்க என்ன செய்ய வேண்டும் என்ற சிந்தனையில் படம் எடுக்கப்பட்டுள்ளது.
Lastஆ படத்தின் முடிவில் அந்தப் பையன் விளையாடிகிட்டு இருக்கான் அம்மா பொண்ணுகிட்ட சொல்றாங்க பார் அவனுக்கு இந்த பிரச்சினை என்ன என்று தெரியும். இந்த பிரச்சினையால அவன் வீட்டுல ஒதுங்கி இருக்கல அவன் அவனோட வேலைய செய்றான். நீயும் அத போல செய் ஆனால் அதே தவறை மீண்டும் செய்யாதே உனது பாதையை நோக்கி ஓடிச் செல் இது தான் நான் தரும் பாடம் அப்பிடினு சொல்லி படம் முடியுது.
இந்த படத்தை பார்க்கும் பலர் உடனே....
கையில Camera கிடைச்சா என்ன வேணும்னாலும் படம் எடுப்பீங்களா? எங்க வீட்டுல இப்பிடி நடந்திச்சினா... என தொடங்கி அப்படத்தையே கழுவி ஊத்தும் அளவுக்கு பல ஆர்வக்கோளாறுகளையும் கோபப்பட வைக்கும் கொந்தளிக்க வைக்கும் comment பண்ண வைக்கும்.
ஆனால் Director Sarjun இனுடைய Lakshmi & MAA இரண்டு படங்களுமே என்னைக் கவர்ந்தவை அதனால் தான் இவ்வளவு பெரிய பதிவு.

No comments:

Post a Comment

"வெளிநாடு போனவுடன் வீரம் பெற்றவர்களுக்கு சமர்ப்பனம்!! உங்களுக்கு என்ன தான் சிக்கல் இலங்கை வாழ் தமிழர்கள் மீதுஎன்று தெரியவில்லை... ...